tamilnadu

img

இந்தியாவின் ஜிடிபி கணிப்பை மீண்டும் குறைத்த கொண்ட மூடிஸ்

2019-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக தான் இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம்  மீண்டும் அதன் கணிப்பைக் குறைத்து கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக, 2019-ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவிகிதம் வளரலாம் என  மூடிஸ் நிறுவனம் கணித்து இருக்கிறது. இதற்கு முன் மூடிஸ் நிறுவனத்தின் கணிப்பு 5.8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  கடந்த 2018-ல் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் 2020-ம் ஆண்டில் இருந்து, இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் சீரடைந்து ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவிகிதமாக அதிகரிக்கும் எனவும், 2021-ல் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவிகிதமாக இருக்கலாம் எனக் கணித்து இருக்கிறது. 

சமீபத்தில், இந்தியாவுக்கான மதிப்பீட்டை ’ஸ்டேபில்’ என்கிற மதிப்பீட்டில் இருந்து ’நெகட்டிவ்’ என்கிற மதிப்பீட்டுக்கு மூடிஸ் நிறுவனம் மாற்றியது. அதோடு இந்தியாவின் 21 முன்னணி நிறுவனங்களுக்கான மதிப்பீட்டையும் குறைத்து. இந்த 21 நிறுவனங்கள் பட்டியலில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி, எஸ்.பி.ஐ போன்ற பெரிய பெரிய நிதி நிறுவனங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.